சாரதி சுப்ரமணியம்
Sunday, November 11, 2018
நெகமம் ஜமீனதாா் வரலாறு
Monday, June 18, 2018
ஜோதிடம் − சூரியன்
சூரியன்
----------------
சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு நாடு என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில் கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.
சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது.
சூரியனுக்கு
ஆட்சி வீடு சிம்மம்
உச்ச வீடு மேசம்
நீச வீடு துலாம்
குரு, செவ்வாய், சந்திரன், புதன் ஆகியன நட்பு கிரகங்கள்
சனி, சுக்கிரன் ராகு கேது பகை கிரகங்கள்
Thursday, May 31, 2018
விஷ்ணு சகஸ்ரநாமம்-5
யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே!!
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே!!
சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.
Wednesday, May 30, 2018
விஷ்ணு சஹஸ்ரநாமம்-4
அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே
மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு,
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு!

Monday, May 28, 2018
விஷ்ணு சஹஸ்ரநாமம்-3
என்கிறது ஒரு ஸ்லோகம்.
உண்மையில்,
அவள் படகு ஓட்டி பிழைத்து வந்தாள். ஒரு சமயம், பராசர முனிவர், ஆற்றின் அக்கறைக்கு செல்ல வந்தார். அவளிடம், "பெண்ணே, நீ முன் ஜென்மத்தில், பித்ருக்களுக்கு மகளாக இருந்தாய். அவர்களது சாபத்தால், மீன் வயிற்றில் பிறந்தாய். உன் உண்மைத் தந்தை, இந்நாட்டின் மன்னன். நீ, எனக்கு மனைவியானால், உலகம் போற்றும் உத்தமனை பெறலாம். அதன்பின், மீண்டும் நீ கன்னியாகவே மாறி விடலாம்...' என்றார்.
சத்தியவதி அழுதாள். மகனிடம் பக்குவமாக, அந்தத் தாயின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார் பராசரர். அதன்பின், சிறுவன் அவளது மடியில் அமர்ந்தான். பராசரர், குழந்தையின் கையில் கமண்டலத்தைக் கொடுத்து, "நீ வேதவியாசன் ஆவாய்...' என்று வாழ்த்தினார். அந்தக்கணமே, வியாசர் சஞ்சாரம் கிளம்பி விட்டார். வருந்தினாள் சத்தியவதி.
இதன் பின் வியாசர், வேதத்தை நான்காகப் பிரித்து, தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றினார்.
ஆசாரிய பரம்பரையில் வரும் ஸ்லோகத்தில் வியாசரின் பெயரும் வருகிறது.
ஒரு அற்புத காவியத்தை உலகுக்கு அளித்த மகானை, சாதுர்மாஸ்ய விரத துவக்க நாளன்று நினைவு கூர்வோம்.
விஷ்ணு சஹஸ்ரநாமம்-2
பராஸராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம்
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
விஷ்ணு சஹஸ்ரநாமம்-1
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
Friday, March 23, 2018
ஒருகுட்டி கதை
ஒருகுட்டி கதை
ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.
ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.
தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,
அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.
அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.
அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.
அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.
அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.
என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
கடைக்காரர் வியந்தார்.
ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.
என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.
வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.
உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.
தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ்வொருவரும்
நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...
நெகமம் ஜமீனதாா் வரலாறு
Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...
-
Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...
-
Prakrutham Srimath Andavan was born in Srimushnam , a swamyam vyakta KshetrA, in South Arcot district to Sri U.Ve. SrinivAsAchAriAr and S...