Monday, June 18, 2018

ஜோதிடம் − சூரியன்

சூரியன்
----------------

சூரிய குடும்பத்தில் கோள்களுக்கு ஒரு மையப்புள்ளியாக அமைந்துள்ளது சூரியனாகும். சூரியனை மையமாகக்கொண்டுதான் கோள்கள் சுற்றிவருகின்றன. சூரியன் ஸ்திரமாக மையத்தில் நிற்கிறது. சூரியன் எந்த கோளையும் சுற்றவில்லை. ஒரு குடும்பம் என்றால் அந்த குடும்பத்தலைவரை மையமாகக்கொண்டுதான் அந்த குடும்பம் இயங்கும். ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஊர்த்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டே அந்த ஊர் இயங்கும். ஒரு  நாடு  என்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டுத்தலைவரை மையமாகக்கொண்டே அந்த நாடு இயங்கும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு குடும்பத்தலைவன் (தந்தை), ஊர்த்தலைவன், நாட்டுத்தலைவன், நிர்வாகி,அரசன், அதிகாரி போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒன்பது கிரகங்களில் சூரியனைத்தவிர பிற கிரகங்களை கண்ணால் பார்க்காதவர்கள் இருக்கலாம்,அணால் சூரியனை பார்க்காத ,சூரியனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த ஓப்பீட்டின் அடிப்படையில் சூரியனுக்கு புகழ், கீர்த்தி, பிரபலம் போன்ற காரகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரியனை தன்னை சுற்றிவரும் பிற கிரகங்கள் ,தங்கள் சுற்றுப்பாதையை விட்டு விலகாமல் , அந்தந்த கிரகத்தை, அதனதன் சுற்றுப்பாதையிலேயே சுற்றிவருமாறு இழுத்து பிடித்து வைத்துள்ளது. சூரியன் கிரகங்களின் மையத்தில் இல்லையென்றால் கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதைந்து விடும். இதுபோல் மனித உடலில் அந்தந்த உறுப்புகள் அந்தந்த இடத்திலேயே இருக்க, உடலுக்கென்று ஒரு உறுவ அமைப்பைக்கொடுத்து அது சிதைந்து போகாமல் , அனைத்து உறுப்புகளையும் அதனதன் இடத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டிருப்பது எலும்பாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் எலும்புக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்திருக்கிறார்கள்.
மனித உடம்பில் சூரிய ஒளி அதிகமாக படும் இடம் சிரசாகும். சிரசுக்குள் இருக்கும் மூளையானது சூரிய ஒளி சிரசில் படும் பகல் நேரத்தில் முழுமையாக செயல்படுகிறது. சூரிய ஒளி சிரசில் விழாத இரவு நேரத்தில் மூளை ஓய்வெடுத்துக்கொள்கிறது. மூளை ஓவ்வெடுக்கும் சமயத்தில் ஒட்டுமொத்த உடம்பும் களைப்பில் தூங்கி விடுகிறது. இதன் அடிப்படையில் சிரசு, மூளை, உடல் தெம்பு,உற்சாகம், உயிர்ப்பு போன்ற காரகங்கள் சூரியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் தோன்றாது. உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக கருதப்படுகிறான். இதன் அடிப்படையில் சூரியன் பித்ருக்காரகன்(தந்தை) என அழைக்கப்படுகிறான்.
இறைவன் ஒளி வடிமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இறைவனை ஒளி வடிவத்தில் கண்டதாக பல மகான்கள் தங்கள் அனுபவத்தில்  கண்டு கூறியிருக்கிறார்கள். சூரியன் ஒளி வடிவமாக இருப்பதால் பரமாத்மா என அழைக்கப்படுகிறான்.
வெளிச்சமே உயிரினங்களுக்கு கண் பார்வையைத்தருகிறது . வெளிச்சமில்லாமல் கண்களால் எதையும் பார்க்க முடியாது. அந்த வெளிச்சத்தை தரும் கிரகம் சூரியன் என்பதால் கண் பார்வைக்கு காரக கிரகமாக சூரியனை நிர்ணயித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் வலது கண்ணைக்குறிக்கும் கிரகம் சூரியன் என கூறப்பட்டுள்ளது.
சூரியனின் நிறம் இளம் சிவப்பாகும். சூரிய ஒளியில் மலரும் செந்தாமரை சூரியனுக்கு உரிய மலராக கூறப்பட்டுள்ளது. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் கோதுமை சூரியனுக்குரிய தானியமாக கூறப்பட்டுள்ளது.

சூரியனுக்கு
ஆட்சி வீடு சிம்மம்
உச்ச வீடு மேசம்
நீச வீடு துலாம்

குரு, செவ்வாய், சந்திரன், புதன் ஆகியன நட்பு கிரகங்கள்

சனி, சுக்கிரன் ராகு கேது பகை கிரகங்கள்

நெகமம் ஜமீனதாா் வரலாறு

Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...